உலகின் மிகப்பெரிய பிச்சைக்காரரின் சொத்து மதிப்பு இவ்வளவுதானா?

உலகின் மிகப்பெரிய பிச்சைக்காரரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்.
மாதிரி படம்
மாதிரி படம்ENS
Published on
Updated on
1 min read

மும்பை: உலகின் மிகப்பெரிய பிச்சைக்காரர் என்று அறியப்படுபவர் மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின். இவரது சொத்து மதிப்பு 7.5 கோடி என்று அறியப்படுகிறது.

மும்பையின் ரயில் நிலையம் ஒன்றில் தினமும் பிச்சையெடுப்பதன் மூலம் இவர் மாதந்தோறும் ரூ.60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது. இவருக்குச் சொந்தமாக இரண்டு குடியிருப்புகள், சில கடைகளும் உள்ளன.

அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் பிச்சை எடுப்பதை நிறுத்தும்படி வலியுறுத்தினாலும் பாரத் ஜெயின் அதற்கு ஒப்புக்கொள்வதில்லை.

மாதிரி படம்
டிச. 27-இல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாரத் ஜெயின் பிச்சையெடுப்பதைத்தான் முழு நேரத் தொழிலாக செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ரூ.2000 முதல் ரூ.2500 வரை சராசரியாக அவரது வருவாய் இருக்கிறது. இது அவர் பிச்சையெடுக்கும் இடத்தைப் பொருத்து மாறுபடுகிறது. அது மட்டுமல்ல, நாள்தோறும் 12 மணி நேரம் அவர் பிச்சையெடுக்கிறார். இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை மாதந்தோறும் ஈட்டி வருகிறார்.

ஆரம்பத்தில் அவர் சம்பாதித்த பணத்தை சிறந்த முறையில் சேமித்ததால்தான் தற்போது மும்பையில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் வாங்கியிருப்பதாகவும், அதன் மதிப்பு ரு.1.4 கோடி என்றும் கூறுகிறார்கள். அதில் ஒரு குடியிருப்பில் அவர் தனது மனைவி, மகன்கள், தந்தை, சகோதரருடன் வசித்து வருகிறார். தாணேவில் இரண்டு கடைகள் சொந்தமாக வைத்திருக்கிறார். அதனை ரூ.30 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டிருப்பதாகவும், அது மட்டுல்லாமல் சில முதலீடுகள் மூலம் மாதம் வருமானம் ஈட்டுவதாகவும் அதனால் அவரது பிள்ளைகளின் எதிர்கால பாதுகாப்பையும் உறுதி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மகன் படித்து முடித்துவிட்டு சொந்தமாக கடை நடத்துவதாகவும் கூறுகிறார்கள்.

மும்பையில் கோடீஸ்வரராக இருக்கும் பிச்சைக்காரர் என்றால் அது பாரத் ஜெயின் மட்டும் இல்லையாம். அங்கிருக்கும் பல பிரச்சைக்காரர்கள் கோடீஸ்வரர்கதான் என்றும், அவர்களது சொத்து மதிப்பும் பட்டியலிடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com