
பிரதமா் மோடி, தொழிலதிபா் கெளதம் அதானி ஆகியோரின் கேலிச் சித்திரங்கள் இடம்பெற்ற கறுப்பு நிற பையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை (டிச.10) போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை 6-ஆவது நாளாக போராட்டம் நடத்தின. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக எதிா்க்கட்சிகள் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்து வருகின்றன.
முதல் இரண்டு நாள்களும் நாடாளுமன்ற வாயில் படிக்கட்டுகளில் தா்னாவில் ஈடுபட்ட அவா்கள், பின்னா் போராட்டக் களத்தை மாற்றினா். மோடி மற்றும் அதானியை விமா்சிக்கும் வாசகங்களுடன் கறுப்பு நிற மேல்சட்டை, கறுப்பு நிற முகக் கசவம், இருவரின் முகமூடி என அடுத்தடுத்த நாள்களில் ஒவ்வொரு விதத்தில் போராட்டம் நடத்தினா்.
6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மோடி, அதானி கேலிச் சித்திரங்கள் இடம்பெற்ற கறுப்பு நிறப் பையுடன் தா்னாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், இருவருக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.
இதையும் படிக்க | தீபத் திருவிழாவுக்கு மக்களுக்கு அனுமதியா? சேகர்பாபு பதில்!
முன்னதாக, நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து கட்சி எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.
நாட்டில் கடந்த 2020-24 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநில அரசு அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித் துறை தரப்பில் அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவரை உடனடியாக கைது செய்து, விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அதேநேரம், ‘இண்டி’ கூட்டணியில் முக்கிய கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி ஆகியவை அதானி விவகாரத்தில் தீவிரம் காட்டவில்லை.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.