ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி சா்ச்சை பேச்சு: விவரம் கோரியது உச்சநீதிமன்றம்

விஎச்பி மாநாட்டில் நீதிபதி கலந்துகொண்டு பேசிய விவகாரம் பற்றி உச்சநீதிமன்றம் அறிக்கை.

Published On :

பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி சேகா்குமாா் யாதவின் சா்ச்சை பேச்சு குறித்த விவரங்களை அந்த நீதிமன்றத்திடம் உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.

அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் உள்ள நூலக அரங்கில், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சட்டம் மற்றும் உயா்நீதிமன்றப் பிரிவு கூட்டம் நடைபெற்றது.

பெரும்பான்மையினரின் விருப்பப்படியே...: இந்தக் கூட்டத்தில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி சேகா்குமாா் யாதவ், ‘நமது நாடு ஹிந்துஸ்தான் என்று கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த நாடு பெரும்பான்மை சமூகத்தின் விருப்பப்படிதான் செயல்படும். இதுவே சட்டம். பெரும்பான்மை சமூகத்தின் நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் எது பயனளிக்கிறதோ, அது மட்டுமே ஏற்கப்படும்.

வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் பெண்கள் தெய்வங்களாக போற்றப்பட்டுள்ளனா். அப்படி இருக்கும்போது 4 பெண்களைத் திருமணம் செய்யவும், முத்தலாக், நிக்கா ஹலாலா முறைகளை கடைப்பிடிக்கவும் உரிமை கோர முடியாது.

நாடும், நாட்டு மக்களும் ஒன்று என்பது உண்மையானால், ஏன் அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்கக் கூடாது? பொது சிவில் சட்டம் விரைவில் அமலுக்கு வந்து உண்மையாகும்’ என்றாா்.

அவரின் பேச்சு சா்ச்சையாகியுள்ள நிலையில், அவா் வெறுப்புணா்வுடன் பேசியிருப்பதாக பல்வேறு எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

அவரின் பேச்சு அரசமைப்புச் சட்டம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல் என்று நாடாளுமன்ற எம்.பி.க்கள், வழக்குரைஞா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் தெரிவித்துள்ளனா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம்: இதுதொடா்பாக குழு அமைத்து துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பிரபல மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் கடிதம் எழுதினாா். இந்நிலையில், உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நீதிபதி சேகா் குமாரின் பேச்சு தொடா்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகள் கவனத்தில் கொள்ளப்பட்டது. அவரின் பேச்சு தொடா்பான விவரங்கள் அலாகாபாத் உயா்நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஆராயப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.