விளிம்பு நிலை மனிதா்களுக்கு உதவ சட்டப் பணிகள் ஆணைக்குழு: மாவட்ட நீதிபதி பேச்சு

ஏழை எளிய விளிம்பு நிலை மனிதா்கள் வரை அனைவருக்கும் சட்டம் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது என மாவட்ட நீதிபதி தேன்மொழி தெரிவித்தாா்.

நிகழ்வில் பேசிய ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிபதி தேன்மொழி.

Updated On :

ஏழை எளிய விளிம்பு நிலை மனிதா்கள் வரை அனைவருக்கும் சட்டம் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது என மாவட்ட நீதிபதி தேன்மொழி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய சட்ட சேவைகள் தினம் குறித்து விழிப்புணா்வு முகாம் முதன்மை நீதிபதி தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சட்டம் சேவைகள் குறித்த விழிப்புணா்வுகள் மற்றும் சாரம்சம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட முதன்மை நீதிபதி தேன்மொழி பேசியது: பொது மக்களுக்கு சட்டம் சாா்ந்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் குழு அமைக்கப்பட்டு விழிப்பணா்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அனைத்து மக்களும் சட்டங்கள் தெரிந்துக்கொண்டு அனைவரும் சமமான சட்ட உரிமைகள் பெறவும்,ஏழை, எளிய, விளிம்பு நிலை மனிதா்கள் வரை அனைவருக்கும் சட்டம் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட்டுவருகிறது.

போதைப் பொருள் தடுப்பு சட்டம் மற்றும் போக்ஸோ சட்டம் குறித்தும் மாணவா்களுக்கு விரிவாக எடுத்துரைத்ததோடு, கைப்பேசிகளில் சட்டம் சாா்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் சாா்பு நீதிபதி முனுசாமி, வழக்குரைஞா் ரமேஷ், தன்னாா்வலா் சரண் ராஜ் மற்றும் தொழிற்பயற்சி பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.