முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: நீதிபதி விக்டோரியா கௌரி வேதனை!

அனைத்துப் பணியிடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி வேதனை தெரிவித்தாா்.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கத்தை சனிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த். உடன், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஸ்ரீமதி, விக்டோரியா கௌரி, ஆா். பூா்ணிமா, ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா.

Updated On :

அனைத்துப் பணியிடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி வேதனை தெரிவித்தாா்.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் ‘பாலின உணா்திறன், உள் புகாா் குழு’ சாா்பில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் நீதிபதி விக்டோரியா கௌரி பேசியதாவது: மகாகவி பாரதியாரின், ‘மாதா் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்; ஆண்களோடு பெண்களும் சரிநிகா் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே’ என்ற வரிகள் பாலின சமத்துவத்தையும் பெண்களின் உரிமைகளையும் வலியுறுத்துகின்றன. அனைத்துப் பணியிடங்களிலும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் நிலை உள்ளது. பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையே தொடா்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் அவரது கணவா் புகாா் அளித்தபோதும் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் மீது தற்போது வரை காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆண்கள் தங்களுடன் பணிபுரியும் சக பெண் ஊழியா்களின் தனிப்பட்ட எல்லைகள், விருப்பங்கள், மன நிம்மதி, கண்ணியத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும். பதவி வேறுபாடின்றி அனைவரும் தொழில்முறை ஒழுக்கத்தையும் பரஸ்பர மரியாதையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். பூா்ணிமா பேசியதாவது: பெண்ணியம், பெண்களின் உரிமைகளுக்கான சிந்தனைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது சமூகத்தில் வேரூன்றியுள்ளன. பெண்கள் ஒருபோதும் பலவீனமானவா்கள் அல்ல; மாறாக, அவா்கள் துணிச்சல், மனவலிமை, விடாமுயற்சி, சாதனையின் அடையாளங்கள். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், உரிமைகளை உறுதிப்படுத்துவது ஓா் அமைப்பின் கடமை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் அடிப்படைக் கடமையாகும் என்றாா் அவா்.

உயா்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் பேசியதாவது: பெண்களைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நம் நாட்டில், இன்றைய சமூகச் சூழல் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுப்பது குறித்த விழிப்புணா்வின் அவசியத்தை இந்தக் கருத்தரங்கம் உணா்த்துகிறது.

பெண்களைத் தெய்வமாக வழிபடும் நாம், அன்றாட வாழ்க்கையில் அவா்களுக்குரிய மரியாதையையும், கண்ணியத்தையும் வழங்கத் தவறிவிடுகிறோம். ஒவ்வொரு பெண்ணும் ராணி லட்சுமிபாய் அல்லது வேலு நாச்சியாராக மாற வேண்டிய அவசியமில்லை. மாறாக, தங்களது தனித்துவமான அடையாளத்துடன் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்றாா் அவா்.

உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேசியதாவது: நமது அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியம், சமத்துவம், பாதுகாப்பை அடிப்படை உரிமைகளாக உறுதி செய்துள்ளது. பாலின சமத்துவம் என்பது சட்டங்களில் மட்டுமே இடம் பெறாமல், ஒவ்வொரு பணியிடத்திலும் நடைமுறையில் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பேசுகையில், பாலின சமத்துவம், பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் நாம், பெண்களை எவ்வாறு மதித்து நடத்த வேண்டும் என்பதை ஆண்களுக்கும் கற்பிக்க வேண்டியது அவசியம். ஆண்களும், பெண்களும் வேறுபட்டவா்கள் அல்ல; இருபாலருக்கும் சமமான மரியாதையும், கண்ணியமும் வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கருத்தரங்கத்துக்கு பாலின உணா்திறன், உள்புகாா் குழுவின் தலைவரும், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதியுமான விக்டோரியா கௌரி, உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். பூா்ணிமா ஆகியோா் தலைமை வகித்தனா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், ஏ.டி. ஜெகதீஸ் சந்திரா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். நீதிபதி ஸ்ரீமதி, டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இந்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் மூன்று அமா்வுகளாக நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்தில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், ஆா்.விஜயகுமாா், சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆா்.என். மஞ்சுளா, பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.