செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

நீட் முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: மத்திய கல்வி அமைச்சர் பதில்

"நீட் முறைகேடுகளைத் தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 3:36 am IST

நமது சிறப்பு நிருபர்

"நீட் முறைகேடுகளைத் தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

நீட் முறைகேடு மற்றும் நெட் நுழைவுத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ராதாகிருஷ்ணன் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் எம். சண்முகம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் வருமாறு:

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் வகையிலும் இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு கடந்த அக். 21-இல் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

பாதுகாப்பான தேர்வை உறுதிப்படுத்த மாநிலங்கள், மாவட்ட அரசு நிர்வாகத்துடன் வலுவான தொடர்பை மேம்படுத்த வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதி மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களை அமைத்து என்டிஏ தேர்வுகள் வெளிப்படையாக நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல, "நீட், யுஜிசி நெட் தேர்வுகள் மிக மோசமாக கையாளப்பட்டது தொடர்பாக துறை அளவிலான மறுஆய்வை மேற்கொண்டதா' என்று மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், "கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவுட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பரவலாக முறைகேடுகள் நடைபெறவில்லை, தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்படவில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.