மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள், பதிவு செய்த கோரிக்கைகள், தொடர்புடைய துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களை இங்கே தொகுத்துள்ளோம்.

News image

மக்களவை - பிடிஐ

Updated On :6 ஆகஸ்ட் 2026, 6:12 am IST

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள், பதிவு செய்த கோரிக்கைகள், தொடர்புடைய துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களை இங்கே தொகுத்துள்ளோம்.

மக்களவையில்...

தன்னாட்சி பழங்குடியின கவுன்சில்களை பிற மாநிலங்களில் மத்திய அரசு உருவாக்குகிறதா?

டி.ஆர். பாலு (திமுக) எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், "தற்போதைக்கு அஸ்ஸôம், மேகலாயம், மிúஸôரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இந்திய அரசமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில அரசுகளால் முறைப்படி பரிந்துரைக்கப்பட்ட புதிய தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்களுக்கான எந்தவொரு புதிய கோரிக்கையோ, பரிந்துரையோ மத்திய அரசுக்கு வரவில்லை. எனவே, அதற்கான எந்தவொரு பரிசீலனையும் நிலுவையும் இல்லை' எனக் கூறியுள்ளார்.

தமிழக ரயில் பாதை திட்டங்களின் நிலை என்ன?

பி. மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில், "தமிழகத்தில் 2009-14 ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு ரூ.879 கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2026-27 நிதியாண்டில் 8 மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டு ரூ.7,611 கோடியாக வழங்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2026 வரையிலான காலத்தில் 1,356 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 1 நிலவரப்படி, தமிழகத்தில் ரூ.27,282 கோடி மதிப்பீட்டிலான 1,874 கி.மீ. நீளமுடைய 19 திட்டங்களுக்கு (8 புதிய பாதைகள், 3 அகலப் பாதைகள், 8 இரட்டைப் பாதைகள்) அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன' எனக் குறிப்பிட்டுள்ளார்.

வானிலை முன்னறிவிப்பு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு என்ன நடவடிக்கை?

எம். கதிர் ஆனந்த் (திமுக) எழுப்பிய கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில், செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் இந்திய துணைக் கண்டப் பகுதிகளில் அடர் மேகங்கள் உருவாவதும், தீவிர மழைப் பொழிவு நிகழ்வுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. மனிதச் செயல்பாடுகளால் ஏற்படும் உலகளாவிய காலநிலை மாற்றம் பருவமழையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து புவி அறிவியல் அமைச்சக விஞ்ஞானிகள் விரிவாக ஆய்வு செய்துள்ளனர். மாறுபடும் பருவமழை முறைகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்க, காலநிலை மாதிரி, செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் வளிமண்டல ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்க "வானிலை இயக்கம்' (மிஷன் மௌசம்) எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வழித்தட ரயில்களில் தரமான உணவுக்கு என்ன நடவடிக்கை?

டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சி.என். அண்ணாதுரை, ஜி. செல்வம்

ஆகிய திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில், ரயில்களின் சமையல் அறைகள் மற்றும் உணவுக்கூடங்களில் மூன்றாம் தரப்பு தணிக்கை மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தென்னிந்திய பிராந்திய உணவுகளான தக்காளி சாதம், பருப்புக் கூட்டு, வற்றல், பருப்பு உருண்டை குழம்பு, வாழைக்காய் வறுவல், கொத்தவரங்காய் பொரியல், செட்டிநாடு உருளைக்கிழங்கு பட்டாணி கறி, பாயாசம், நெய் சோறு, மலபார் பரோட்டா போன்ற உணவுகள் ரயில்களில்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவையில்...

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக மாற்றுக!

மு. தம்பிதுரை (அதிமுக) மாநிலங்களவைத் தலைவரின் அனுமதியுடன் இந்த கோரிக்கையை வலியுறுத்திப் பேசுகையில், "தமிழக தலைநகருக்கு "சென்னை' என பெயர் மாற்றப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், மாநிலத்தின் உயரிய நீதி அமைப்பு இன்னமும் "மெட்ராஸ்' என்ற காலனித்துவப் பெயரிலேயே தொடர்கிறது. மாநிலத்தின் தனித்துவத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் நிலைநிறுத்த "தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

உச்சநீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா மீதான விவாதம்

ஆர். கிரிராஜன் (திமுக): உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துவதை வரவேற்கும் அதே வேளையில், நீதித் துறையில் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஐ.எஸ். இன்பதுரை (அதிமுக): "இந்த மசோதாவை அதிமுக வரவேற்கிறது. அதேசமயம், நாட்டின் பழைமையான சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 5.53 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் 52 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் இந்த சட்டத்திருத்தம் மிகவும் அவசியமானதாகும். அதேபோல, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், நீதிபதிகளின் எண்ணிக்கையை 75-லிருந்து 100-ஆக உயர்த்தி தமிழக மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.