அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி தொடர்புடைய முக்கிய விஷயங்களை எழுப்பினர்.

News image

நாடாளுமன்றம்

Updated On :30 ஜூலை 2026, 4:39 am IST

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி தொடர்புடைய முக்கிய விஷயங்களை எழுப்பினர். சிலர் எழுப்பிய கேள்விகளுக்கும் அவற்றுக்கு தொடர்புடைய துறை அமைச்சர்கள் அளித்துள்ள பதில்களும் இங்கே சுருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளன.

மக்களவையில்...

தூத்துக்குடியில் நுண் நெகிழி மாசுபாடு தடுக்கப்படுகிறதா?

கனிமொழி கருணாநிதி ( திமுக) எழுப்பிய கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், தேசிய கடலோர ஆராய்ச்சி மைய கணக்கெடுப்பின்படி, தூத்துக்குடி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் 'மிதமான தூய்மை' பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள வண்டல் மண்ணில் நுண் நெகிழி (பிளாஸ்டிக்) அளவு மிகக் குறைவாகவே உள்ளதுடன், அபாயகர மாசுபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு ஏஐ மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவா?

ஆ. ராசாவின் ( திமுக) கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, "இந்தியா}ஏஐ' திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 58 'செயற்கை நுண்ணறிவு மையங்கள்' அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 13 மாநிலங்களில் 22 மையங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு 2 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார்.

சேலத்திலிருந்து தில்லி, மும்பைக்கு நேரடி விமான சேவை வருமா?

ஏ. மணி (திமுக): நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்களிக்கும் தொழில் மற்றும் வர்த்தக மையமான சேலத்தில் இருந்து தில்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இல்லாததால் தொழிலதிபர்கள், மாணவர்கள், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். சேலம் விமான நிலையம் பயன்பாட்டில் இருப்பதால், அங்கிருந்து தில்லி மற்றும் மும்பைக்கு உடனே நேரடி விமான சேவைகளைத் தொடங்க விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விமான நிலையத்தை உடனே திறக்க வேண்டும்!

டி. எம். கதிர் ஆனந்த் (திமுக): 'உடான்' திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தும், அதைச் செயல்படுத்துவதில் தேவையற்ற தாமதம் நீடிக்கிறது. உரிமம் வழங்குவதற்குத் தேவையான விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறையின் (பிசிஏஎஸ்) இறுதி பாதுகாப்பு ஆய்வு நிலுவையில் உள்ளதே இதற்கு முக்கியக் காரணம். இந்தத் தாமதத்தால் சென்னை, பெங்களூரு பயணங்களுக்கு அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர். எனவே பிசிஏஎஸ் ஆய்வை விரைந்து முடித்து விமான நிலையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மாநிலங்களவையில்...

மகளிர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கிய நிதியுதவி எவ்வளவு?

ராஜாத்தி (எ) கவிஞர் சல்மா (திமுக) எழுப்பிய கேள்விக்கு மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள பதிலில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி வாரியம் மூலம் தமிழ்நாட்டுக்கு 2021}22-இல் ரூ. 13 லட்சமும், 2022}23-இல் ரூ. 6 லட்சமும், 2023}24-இல் ரூ. 58 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்துக்கு 2022}23-இல் ரூ 20 லட்சம் மற்றும் கேரளத்துக்கு 2025}26-இல் ரூ. 2 லட்சம் என நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுச் சங்கங்களில் மகளிர் பங்கேற்பு உயர்த்தப்படுகிறதா?

கே.ஆர்.என். ராஜேஷ்குமார் (திமுக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள பதிலில், பால் வளம், விவசாயம், கைவினைப்பொருளகள் போன்ற துறைகளில் பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்களை உருவாக்க அரசு ஊக்குவித்து வருகிறது. தேசிய கூட்டுறவு வளர்ச்சி வாரியம் மூலம் பெண்களுக்குத் திறன் பயிற்சி மற்றும் நிதி உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.