உயர்நீதிமன்ற நீதிபதி மீது பதவி நீக்கத் தீர்மானம்!

உயர்நீதிமன்ற நீதிபதி மீது மக்களவை எதிர்க்கட்சி எம்பிக்கள் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

முஸ்லிம்கள் மீதான சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதவி நீக்கத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த டிச. 8 ஆம் தேதி வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) சட்டப்பிரிவு அமைப்பின் மாநாட்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார் யாதவ் பங்கேற்ற விவகாரம் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க..:விஎச்பி மாநாட்டில் நீதிபதி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரசாந்த் பூஷண் கடிதம்!

இதனைக் கண்டித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார் யாதவ் மீதான பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

மக்களவை எம்பியும், வழக்குரைஞருமான கபில் சிபல் தொடங்கிய இந்த மனுவில், இதுவரை 40-க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தீர்மானத்தில் காங்கிரஸ் எம்பி திக்விஜய சிங், விவேக் தங்கா, ரேணுகா சௌத்ரி, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், திரிணமூல் காங்கிரஸின் சகேத் கோகலே மற்றும் சகாரியா கோஷ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா, சமாஜவாதியின் ஜாவேத் அலிகான், மார்க்சிய கம்யூனிஸ்ட்டின் ஜான் பிரிட்டாஸ், ஏ.ஏ. ரஹிம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தோஷ் குமார், பிபி. சுனீர் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதையும் படிக்க..:பும்ராவுக்கு எதிராக ரன்கள் குவிப்பது நல்ல அனுபவம்: ஆஸி. இளம் வீரர்

நீதிபதி தனது கருத்துக்கள் மூலம் பிரிவினைவாதத்தை உருவாக்கி, மக்களுக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கைக்கு களங்கம் விளைவித்துள்ளார் எனவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 1997 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதித்துறையின் மதிப்புகளை மீறுவதாக இருக்கிறது. நீதிபதிகள் தங்களின் தீர்ப்புகள் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாரபட்சமற்ற தன்மை, சம உரிமை, கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் மீதான விசாரணைச் சட்டப்பிரிவு 3(1) பி கீழ் நீதிபதி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களவையில் 100 எம்பிக்களும், மாநிலங்களவையில் 50 எம்பிக்களும் கையெழுத்திட்டால் இந்தத் தீர்மானத்தின் மூலம் நீதிபதிக்கு எதிராக புகாரளிக்க முடியும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை மக்களவையில் 50 எம்பிக்களும், மாநிலங்களவையில் 38 எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதையும் படிக்க..:‘அகாய் கோலி’யின் அர்த்தத்தை அதிகம் தேடிய ரசிகர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com