‘அகாய் கோலி’யின் அர்த்தத்தை அதிகம் தேடிய ரசிகர்கள்!

விராட் கோலியின் மகன் பெயர் அர்த்தத்தை இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
குழந்தைகள் மற்றும் மனைவியுடன் விராட் கோலி
குழந்தைகள் மற்றும் மனைவியுடன் விராட் கோலி
Published on
Updated on
1 min read

விராட் கோலியின் மகன் பெயர் அர்த்தத்தை இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

நடப்பு 2024 ஆம் ஆண்டில் பெரும்பான்மையான மக்களின் தேடல் எதை நோக்கி இருந்துள்ளது. நாட்டில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்?, மக்கள் மிக அதிகமாக தேடிப் படித்த தகவல்கள் எது என்பதை தற்போது கூகுள் வெளியிட்டுள்ளது.

அந்த வரிசையில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலையும் கூகுள் வெளியிட்டுள்ளது. அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள், போட்டிகள், திரைப்படங்கள், சுற்றுலாத் தலங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் கூகுள் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க | 9 ஆண்டுகளுக்குப் பிறகு டாப் 10 தரவரிசையில் கீழிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்..! மீண்டு வருவாரா?

அந்த வகையில் அதிகம் தேடப்பட்ட அர்த்தங்கள் என்ற பிரிவில் ரஃபா மீது அனைவரின் பார்வையும் (All Eyes on Rafah) என்ற வசனம் முதலிடத்தையும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் மகன் அகாய் கோலியின் பெயர் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் நண்பர் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இதையும் படிக்க | விமானத்துக்குச் செல்ல தாமதம்: ஜெய்ஸ்வாலை விட்டுச்சென்ற அணியினர்!

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவருக்கும் கடந்த மாதம் பிப்ரவரி 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். மேலும், அவர்கள் வெளியிட்ட பதிவில் வாமிகாவுக்கு தம்பி பிறந்துள்ளான். அவனுக்கு அகாய் எனப் பெயர் சூட்டியுள்ளோம் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், விராட் கோலி ரசிகர்களும் ‘அகாய்’ என்ற பெயரின் பொருளைத் தேடினர். இதனால், இந்தப் பெயர் மிகவும் வைரலானது.

இதையும் படிக்க | கேள்விக்குள்ளாகும் ரோஹித்தின் தலைமைப் பண்பு..! புஜாரா அறிவுரை!

அகாய் என்பது துருக்கிய வேர்ச் சொல்லைக் கொண்ட இந்தி வார்த்தையாகும். சமஸ்கிருதத்தில், ‘உடல் இல்லாமல் எதுவுமில்லை’ என்றும், சமஸ்கிருத வார்த்தையான ‘காயா’ என்ற சொல்லில் இருந்து திரிந்து வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்த்க்கது.

இதையும் படிக்க | கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் யார்? கோலி, மெஸ்ஸிக்கு இடமில்லையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com