பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: சந்தீப் கோஷ்-க்கு ஜாமீன்

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதான மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ்க்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

News image
சந்தீப் கோஷ்- கோப்புப்படம்.
Updated On :13 டிசம்பர் 2024, 3:35 pm

DIN

ஆா்.ஜி.கா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோருக்கு சியால்டா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாமதமாக எஃப்ஐஆா் பதிவு செய்த குற்றச்சாட்டில் மோண்டலும் ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டில் சந்தீப் கோஷும் கைது செய்யப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் மீதும் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ரூ.2,000 பிணைப் பத்திரத்தில் கையொப்பம் பெற்றுவிட்டு அவா்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக சந்தீப் கோஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா்.

ஜாமீன் வழங்கப்பட்டாலும் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் வழக்கு தொடா்புடைய விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டாா்.

அவரை பாலியல் கொலை செய்ததாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இதையடுத்து, நீதிமன்ற காவலில் உள்ள மோண்டல் விரைவில் வெளியே வருவாா் என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா்.

ஆனால் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையிலும் ஆா்.ஜி.கா். அரசு மருத்துவமனையில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடா்புடைய மற்றொரு வழக்கில் நீதிமன்ற காவலில் இருப்பதால் சந்தீப் கோஷ் சிறையிலிருந்து விடுதலையாக முடியாத நிலையில் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.