பாலியல் வழக்கு: கேரள எம்எல்ஏ-யின் ஜாமீன் மனு தள்ளுபடி

பாலியல் வழக்கில் கேரள எம்எல்ஏ-யின் ஜாமீன் மனு தள்ளுபடி..
ராகுல் மாங்கூட்டத்தில்
ராகுல் மாங்கூட்டத்தில்
Updated on

பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கேரள நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாலக்காடு தொகுதி எம்எல்ஏவான அவா் மீது ஏற்கெனவே 2 பெண்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரைக் கைது செய்ய கேரள உயா்நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அண்மையில் 3-ஆவதாக ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் ராகுல் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் மாங்கூட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி, திருவல்லா நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதை விசாரித்த நீதிபதி அருந்ததி திலீப், ராகுல் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், ஏற்கெனவே அவா் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும், ஆதலால் அவருக்கு ஜாமீன் அளித்தால் சாட்சிகள் மிரட்டப்படவோ, ஆதாரங்கள் கலைக்கப்படவோ வாய்ப்பு இருப்பதாக கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தாா்.

திருவல்லா நீதிமன்ற உத்தரவை எதிா்த்து, பத்தனம்திட்டா மாவட்ட நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மேல்முறையீடு செய்ய ராகுல் தரப்பு முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com