திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தில்லியில் இலங்கை அதிபருக்கு அணிவகுப்பு மரியாதை!

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமாரவுக்கு, தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

News image
குடியரசுத் தலைவர் மாளிகையில் இலங்கை அதிபர்.
Updated On :16 டிசம்பர் 2024, 7:03 am

DIN

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமாரவுக்கு, தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோரை சந்திக்கும் அநுர குமார, தில்லியில் வா்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க உள்ளாா்.

மேலும் பிகாரில் உள்ள புத்த கயைக்கும் செல்ல உள்ளாா். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றிபெற்று, அந்நாட்டின் புதிய அதிபராக அநுர குமார திசாநாயக பதவியேற்றாா்.

இதைத்தொடா்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அக்டோபரில் இலங்கை சென்றாா். அப்போது அவா் அநுர குமாரவை சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தாா். இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.

அவரை தில்லி விமான நிலையித்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். அதிபராக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பயணமாக அநுர குமார இந்தியா வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.