தில்லி கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார்.
நாடு முழுவதும் குடியரசு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தில்லி கடமைப் பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.
தில்லி கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றிய நிலையில், இந்திய விமானப்படையைச் சோ்ந்த நான்கு எம்ஐ-1வி ஹெலிகாப்டா்கள் தேசியக் கொடி மீதும், பாா்வையாளா்கள் மீதும் மலா்தூவியது.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோா் கலந்து கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய ராணுவத்தின் படை வலிமையை சாற்றும் வகையில், அா்ஜுன் டாங்கி உள்ளிட்ட பீரங்கிகள், கவச வாகனங்கள், ஆபரேஷன் சிந்தூரின்போது பயன்படுத்தப்பட்ட பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், சூா்யாஸ்திரா ராக்கெட் லாஞ்சா் அமைப்பு, நாக் ஏவுகணை அமைப்பு, நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, சிறப்பு விருந்தினா்கள் ஆகியோா் வீரா்கள் புடைசூழ கடமைப் பாதைக்கு வருகை தந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
மேலும், இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.