மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஓய்வு பெற்ற மோப்ப நாய்களை பள்ளிகளுக்கு பரிசளித்த ராணுவம்!

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற நாய்களை தில்லியில் உள்ள சிறப்புப் பள்ளிக்கு இந்திய ராணுவம் பரிசளித்துள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2024, 4:06 pm

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற நாய்களை தில்லியில் உள்ள சிறப்புப் பள்ளிக்கு இந்திய ராணுவம் பரிசளித்துள்ளது.

தங்கள் உயிர்களை பொருட்படுத்தாமல் செயல்பட்டவர்கள் வீரர்களாக இருந்தாலும், நாயாக இருந்தாலும் உரிய மதிப்பளிக்கப்படும் என்பதை பறைசாற்றும் வகையில் இந்த நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் கே - 9 பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லைப் பகுதிகளில் வெடிபொருட்கள், கண்ணிவெடிகளைக் கண்டறிதல், பனிச்சரிவு மீட்பு, தேடல் மற்றும் மீட்புப் பணிகள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகள் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும், மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளன.

ராம்பூர் ஹவுண்ட், முதோல் ஹவுண்ட், கோம்பை, சிப்பிப்பாறை மற்றும் ராஜபாளையம் போன்ற உள்நாட்டு இனங்கள் இத்தகைய முக்கியப் பணிகளுக்காக இந்திய ராணுவத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன, மற்ற வேலை செய்யும் நாய் இனங்களுடன்.

இந்நிலையில், 246வது ராணுவ கால்நடை மருத்துவப் படை தினத்தையொட்டி, இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நாய்களை தில்லியில் உள்ள ஆஷா சிறப்புப் பள்ளிக்கு பரிசாக வழங்கினர்.

நாட்டை பாதுகாப்பதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த வீரர்கள் உள்பட நாய்களையும் கெளரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ராணுவ வீரர்கள் குறிப்பிட்டனர்.

தன்னலமற்று ராணுவத்தில் அதிகாரிகளின் கட்டளைப்படி செயல்பட்ட நாய்களுக்கு, ஒய்வு பெற்ற பிறகு முறையான பராமரிப்பு உள்ளிட்ட வசதிகள் அமையும் வகையில் தத்தெடுக்கவும் வகை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.