திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

காலியாகவுள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!

காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :23 டிசம்பர் 2024, 7:02 am

DIN

நாட்டில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன. குறிப்பாக தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால் காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஏரா(ERA) லக்னெள மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது லக்னெள மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களை வருகிற டிச. 30 ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, தேவைப்பட்டால் மற்ற கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம், காலியாக உள்ள என்ஆர்ஐ இடங்களையும் பொதுப்பிரிவில் சேர்த்து கலந்தாய்வு நடத்தலாம் என்று கூறியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.