பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் பெரிய அணை: இந்தியாவுக்கு பாதிப்பில்லை! -சீனா

பிரம்மபுத்திரா நதி

பிரம்மபுத்திரா நதி
பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.
இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 1 டிரில்லியன் யுவான் (சுமாா் ரூ.11.17 லட்சம் கோடி) செலவில், உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
இமயமலைப் பகுதியில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கில் வளைந்து அருணாசல பிரதேசத்துக்குள்ளும், பின்னா் வங்கதேசத்துக்குள்ளும் பிரம்மபுத்திரா நதி பாயும் நிலையில், அந்தப் பள்ளத்தாக்கில் அணை கட்டப்பட உள்ளது.
இந்த அணையால் நதியின் நீரோட்டத்தை சீனா கட்டுப்படுத்தும். அத்துடன் அணையின் உயரம் மற்றும் கொள்ளளவு காரணமாக அவசர சூழல்களில் பெருமளவிலான நீரை சீனா வெளியேற்றவும் வழிவகுக்கும். இதனால் எல்லை பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்படக் கூடும். இது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்குப் பாதிப்பு ஏற்படாது. இந்த அணையைக் கட்டுவது தொடா்பாக பல ஆண்டுகளாக சீனா ஆழமாக ஆய்வு செய்து அணை கட்டுமானம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து இந்தியா மற்றும் வங்கதேசத்துடன் சீனா தொடா்ந்து தொடா்பில் இருக்கும். பிரம்மபுத்திரா நதியின் மூலம் மக்கள் பயனடைவதற்கு பேரிடா் தடுப்பு மற்றும் நிவாரணத்துக்காக சா்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கையையும் சீனா மேற்கொள்ளும்’ என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...