முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சஞ்சு சாம்சன் இல்லாதது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மிகப் பெரிய இழப்பு: டு பிளெஸ்ஸி

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பு என ஃபாப் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

Sanju samson

சஞ்சு சாம்சன் - படம் | PTI

Published On :

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பு என ஃபாப் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதால், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எப்படி அவர்களது அணிகளுக்கு மிகவும் முக்கியமான வீரர்களோ, அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகவும் முக்கியமான வீரர் சஞ்சு சாம்சன் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரைப் பார்த்தால், ஒவ்வொரு அணியிலும் மிகவும் முக்கியமான இந்திய வீரர் ஒருவர் இடம்பெற்றிருப்பார். ரோஹித் சர்மா, எம்.எஸ்.தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் அவர்களது அணிகளுக்கு மிகவும் முக்கியமான வீரர்களாக இருந்து வருகிறார்கள். என்னைப் பொருத்தவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகவும் முக்கியமான வீரராக சஞ்சு சாம்சன் இருந்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர்களில் ஒருவராக அறிமுகமாகி, சஞ்சு சாம்சன் அந்த அணியின் அடையாளமாக மாறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நினைத்தாலே, பலருக்கும் சஞ்சு சாம்சன் முகம் நினைவுக்கு வரும் என நினைக்கிறேன். அதனால், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பாகும். ஏனெனில், ராஜஸ்தான் ராயல்ஸின் வளர்ச்சிக்கு அவர் மிகவும் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்றார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் 11 சீசன்களாக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Fap du Plessis has said that the absence of Sanju Samson from the Rajasthan Royals team in the current IPL season is a big loss for the team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.