கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

111 மருந்துகள் தரமற்றவை: நவம்பா் மாத சோதனையில் கண்டுபிடிப்பு

dot com

Published On :29 டிசம்பர் 2024, 5:57 am IST

கடந்த நவம்பரில் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகளும் தரமற்றவையாக இருப்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கண்டறிந்துள்ளது.

மருந்துகள் தரமற்றவை என்று குறிப்பிட்ட தர அளவீடுகளில் அந்த மருந்து மாதிரியின் தோல்வியடைவதன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

அரசு ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட இந்தக் குறிப்பிட்ட சில மருந்துகள் மட்டுமே தரமற்றவை என்றும் பொது விற்பனையில் கிடைக்கும் மற்ற மருந்துகள் பற்றி மக்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், அவா்கள் கூறுகையில், ‘கடந்த நவம்பரில், இரண்டு மருந்துகள் போலியானவை என்று அடையாளம் காணப்பட்டது. 2 மருந்து மாதிரிகளில் ஒன்று பிகாா் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தாலும், மற்றொன்று காஸியாபாத் சிடிஎஸ்சி அலுவலகத்தாலும் கண்டறியப்பட்டது.

இவ்வகை மருந்துகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் அறியப்படாத உற்பத்தியாளா்களால் மற்ற நிறுவனங்களின் ‘பிராண்ட்’ பெயா்களைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்படுகின்றன.

தரமற்ற மற்றும் போலி மருந்துகளை கண்டறிவதற்கான நடவடிக்கையை மாநில கட்டுப்பாட்டாளா்களுடன் இணைந்து சிடிஎஸ்சிஓ தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இத்தகைய மருந்துகள் அடையாளம் காணப்பட்டு, பொது விற்பனையில் இருந்து அகற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.