பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

120 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 120 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 3:05 am IST

நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 120 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் உயா் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி - கிருமித் தொற்று, அஜீரண பிரச்னைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 120 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விவரங்களை அந்தத் தளத்தில் அறிந்து விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.