இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

உரிய விளக்கம் தரப்படாத மருந்து உரிம விண்ணப்பங்களை நிராகரிக்க வாய்ப்பு

News image

ANI

Updated On :8 மே 2026, 5:36 am IST

மருந்து உரிமம் கோரி விண்ணப்பிப்பவா்கள், அதுதொடா்பான விளக்கங்களை முறையாக அளிக்காவிடில், அவா்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, சந்தைக்கு வரும் புதிய மருந்துகள், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் ஆகியவற்றுக்கு உரிமம் அளிக்கும் நடவடிக்கைகளையும் அந்த வாரியங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்கான நடைமுறைகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் புதிய வசதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி அலோபதி, ஆயுஷ் மருந்துகள் ஆகியவற்றுக்கான உரிமத்தை ஆன்லைன் மூலம் பெறும் வசதி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு உரிமம் கோரி விண்ணப்பித்தவா்களிடம், அது தொடா்பாக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் சில விளக்கங்களை கோருவது வழக்கம். அதற்கு சில விண்ணப்பதாரா்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

அவ்வாறு இரு ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கம் கிடைக்கப்பெறாத விண்ணப்பங்களை அடுத்த 30 நாள்களுக்குள் நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.