ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால்: இனி இணையவழியில் உரிமம் பெறலாம்!

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறையை தமிழக அரசு எளிமைப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி இணையவழியில் அதற்கான அனுமதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News image

தமிழக அரசு - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 3:14 am IST

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறையை தமிழக அரசு எளிமைப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி இணையவழியில் அதற்கான அனுமதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளா் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மருந்து உற்பத்தித் துறையில் மெத்தனால் ஒரு முக்கிய கரைப்பான் சோ்மமாகவும், மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஸ்டேடின் போன்ற கொழுப்புச் சத்தைக் குறைக்கும் மருந்துகள், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்க மெத்தனால் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், தரப் பரிசோதனையிலும் கரைப்பானாக அது பயன்படுத்தப்படுகிறது. மருந்தியல் கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களுக்கும் மெத்தனால் இன்றியமையாதது.

மெத்தனால் வாங்குவதற்கான உரிமம் பெற தமிழகத்தில் கடுமையான நடைமுறைகளும், விதிகளும் பின்பற்றப்படுவதாக மருந்து உற்பத்தியாளா்கள் நீண்டகாலமாகக் கூறி வந்தனா். பெரிய தொழிலகங்கள் மட்டுமன்றி, சிறு மருந்து உற்பத்தி நிறுவனங்களும், ஆய்வகங்களும் குறைந்த அளவிலான மெத்தனால் பெறுவதற்குக்கூட சிக்கல் நிலவுவதாகக் கூறின.

இந்நிலையில், தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்ட ‘இ-கலால்’ என்ற இணையதளம் மூலம் மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு 500 லிட்டருக்கும் குறைவாகத் தேவைப்படும் விண்ணப்பதாரா்களுக்கும் இந்த எளிமைப்படுத்தப்பட்ட முறை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்தப் புதிய நடைமுறைக்கு மாநில மருந்து உற்பத்தியாளா் சங்கம் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளது.