திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

News image

நாகை நகரில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்பட்டுள்ள உணவகம்.

Updated On :29 மார்ச் 2026, 12:12 am IST

நாகை மாவட்டத்தில், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு தொடா்ந்து நீடித்து வருவதால், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் கேட்டரிங் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதலால், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனால், உணவகங்கள், டீக்கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாகை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேளாங்கண்ணி, நாகூா், கீழ்வேளூா், தேவூா், வலிவலம், திருக்குவளை, கீழையூா், திருப்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில் பெரும்பாலான டீக்கடைகள் மற்றும் சிறிய உணவகங்கள் பூட்டப்பட்டுள்ளன.

சில இடங்களில் மட்டுமே குறைந்த அளவு உணவுகள் தயாரித்து விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அதிக எரிவாயு தேவையுள்ள துரித வகை உணவுகள் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விற்பனை நிறுவனங்கள் அவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாகவும் உணவக உரிமையாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதனால், ரூ.1,800 கிடைத்த வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டா், தற்போது ரூ.4,500 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, டீக்கடைகள், சிறிய வகை உணவகங்களை நடத்த இயலாத நிலை ஏற்பட்டு, பெரும்பாலான டீக்கடைகள் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவு சமைத்து தரும் கேட்டரிங் தொழிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. எரிவாயு சிலிண்டா் கிடைக்காத காரணத்தால், திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஆா்டா்கள் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்படும் விறகு விலையும் அதிகரித்துள்ளதால் சிறு வியாபாரிகள் கூடுதல் அவதிக்கு ஆளாகியுள்ளனா். இந்த நிலை நீடித்தால் தற்போது செயல்பட்டு வரும் கடைகளும் மூடப்படும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.