34 வது நாளைக் கடந்த உண்ணாவிரதம்! அரசுதான் முடிவு கூற வேண்டும்!
பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 34வது நாளை எட்டியுள்ளது.


பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் (டிச. 29) 34வது நாளை எட்டியுள்ளது.
காந்திய வழியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தல்லேவால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டுமா? அல்லது போராட்டத்தை முடிக்க வேண்டுமா? என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் அபிமன்யு கோஹர் தெரிவித்தார்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி - ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி முதல் இவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தில்லியை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். எனினும் அவர்கள் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் விவசாயிகள் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில எல்லையான கானௌரியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் (வயது 70), நவம்பர் 26 காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரின் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 34வது நாளை எட்டியுள்ளது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் கானெளரி போராட்டக்களத்தில் இருந்தவாறு செய்தியாளர்களுடன் பேசிய விவசாய சங்கத் தலைவர் அபிமன்யு கோஹர்,
''நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் எங்கள் போராட்டத்தை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறது. தவறான செய்திகள் மூலம் அவதூறு பரப்புகிறது. போராட்டத்தின் முதல் நாளில் இருந்தே இதனைத் தெரிவித்து வருகிறோம்.
எங்கள் குரலை மத்திய அரசு கேட்பதில்லை. எங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. மத்திய அரசு இந்த அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அரசாங்கத்தின் இத்தகைய அடக்குமுறையிலும் எங்கள் போராட்டம் காந்திய வழியில் தொடர்கிறது.
தல்லேவாலின் இந்தப் போராட்டம் தொடர வேண்டுமா? அல்லது முடிய வேண்டுமா? என்பதை அரசுதான் இப்போது முடிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிய இப்போராட்டம் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். நாம் வெற்றியின் வாசலில் இருக்கிறோம். நாம் மிகவும் வலிமையாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இதற்கு தல்லேவால் தனது வாழ்க்கையை பணயமாக வைத்துள்ளார்'' எனக் கூறினார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...