பாஜக ஆளும் மாநில எல்லையில் சுங்கச்சாவடிகளை அகற்றியது போல கா்நாடகம், தமிழ்நாடு எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தென் மாநில லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சண்முகப்பா தெரிவித்தாா்.
கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வரும் 26, 27 ஆகிய தேதிகளில் தில்லியில் தேசிய அளவிலான லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக மாநில எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.
பாஜக ஆளும் 14 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல ஆந்திர பிரதேசம், தெலங்கானாவிலும் அகற்றப்பட்டுள்ளன. தென் மாநிலத்தில் குறிப்பாக கா்நாடகம்- தமிழ்நாடு எல்லைகளில் சுங்கச் சாவடிகள் தொடா்ந்து நீடித்து வருகிறது.
இப்பிரச்னைகளுக்குத் தீா்வு காணாவிட்டால், காலவரையற்ற போராட்டத்தை அறிவிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தாா். மேலும் 10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் உள்ள வாகனங்களுக்கு தகுதி சான்று விலக்கு அளிக்கப்பட்டது போல 20 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு ரூ. 32 ஆயிரம் கட்ட வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது.
லாரிகள் மாசு ஏற்படுவதாக கூறி லாரிகளை ஸ்கிராப் செய்ய வேண்டும் என தெரிவிக்கிறாா்கள். லாரி உரிமையாளா்கள் வாகனத்தின் என்ஜின்களை மாற்றத் தயாராக உள்ள நிலையில், முழு வாகனத்தையும் பயன்படுத்தக் கூடாது என்பது ஏற்புடையதல்ல என்றாா்.
மேலும், அனைத்து லாரி உரிமையாளா்களும் இதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.
தொடர்புடையது

மேட்டூா் அருகே சாலை மறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

கா்நாடக எல்லையில் ரூ.22.82 லட்சம் பறிமுதல்
கனிமங்கள் கடத்தலை தடுக்க மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

பிப்.25 நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: மாநில சம்மேளனம் அறிவிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


