எல்லாம் தெரிந்த ஏஐ-யிடம் சொல்லக் கூடாத ஐந்து விஷயங்கள்!

எல்லாம் தெரிந்த ஏஐ-யிடம் சொல்லக் கூடாத கேட்கக் கூடாத ஆறு விஷயங்கள்!
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு
Published on
Updated on
1 min read

செயற்கை நுண்ணறிவு என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒற்றை வார்த்தையில் கட்டிப்போட்டிருக்கும் ஏஐ எனப்படும் செய்யறிவு உண்மையில் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் உலகம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், எதற்கெடுத்தாலும் ஏதேனும் ஒரு சாட் ஜிபிடி போன்ற ஏஐ உதவியை நாடுபவர்களின் கவனத்துக்கு..

ஒரு பக்கம் ஏஐ என்ற தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருந்தாலும், மறுபக்கம் தொழில்நுட்பத்தின் பல வேலைகள் மறைந்துகொண்டே போகிறது. இதனால், தொழில்நுட்பத் துறையில் பணிவாய்ப்பு பறிபோகிறது என கதறும் குரல்களும் கேட்கத்தான் செய்கிறது.

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை ஏஐ மூலம் பன்மடங்கு மேம்படுத்தப்படும் நிலையில், இதனால் மோசடிகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

இதைச் செய்யலாமா? எப்படி செய்ய வேண்டும்? எப்படி சொல்ல வேண்டும் என பல விஷயங்களை ஏஐயிடம் கேட்கலாம். ஆனால், ஒருபோதும் இந்த ஆறு விஷயங்களை மட்டும் நாம் ஏஐயிடம் சொல்லிவிடக் கூடாதாம்.

என்னவாக இருக்கும்? தனிப்பட்ட விவரங்கள் தான்!

சாட்பாட்டிடம் ஒருவர் தகவல்களை கோரும்போது எந்தக் காரணத்தைக் கொண்டும், கேட்பவர் தனது பெயர், முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. இதனால், ஏதேனும் ஒரு வழியில் அவரது அடையாளம் பின்தொடரப்படும்.

பொருளாதாரம் தொடர்பான விவரங்கள்

வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், ஆதார் எண் போன்றவற்றை எப்போதும் ஏஐ செயலிகளில் பகிர வேண்டாம். மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று தகவல் கோரும்போதும் போலியான எண்களைப் பதிவிட்டுக் கேட்கலாம்.

இது வழக்கமானதுதான்.. பாஸ்வேர்ட்

எந்தக் காரணத்தைக்கொண்டும் இப்படி பாஸ்வேர்ட் வைக்கலாமா? என்று கூட செயற்கை நுண்ணறிவிடம் கேட்கக்கூடாது.

ரகசியத்தைக் கூடவா?

ஒருவருக்கு மட்டுமே தெரிந்த அல்லது வேறு யாருக்கும் தெரியக்கூடாது என நினைக்கும் ரகசியத்தை சாட் பாட் செயலிகளிடம் பகிரக்கூடாது. அது என்ன மனிதனா என்றால், இல்லைதான். ஆனால், அது நீங்கள் சொல்லும் தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ளாத இயந்திரம்.

கடைசியாக..

நாம் சொல்வது, கேட்பது என அனைத்தும் சாட் பாட் செயலியில் சேமிக்கப்படலாம். அதன் மூலம் அதன் தரத்தைக் கூட்டுவதற்கு என்று கூறப்படலாம். எனவே, நாம் சொல்வது கேட்பது சேமிக்கப்படத்தக்கது அல்ல என்று கருதினால் அதை கேட்காமல், சொல்லாமல் தவிர்ப்பதே நலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com