வேளாண் துறைக்கு ரூ.1.27 லட்சம் கோடி
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ.1,27,469.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் வேளாண் துறைக்கு ரூ.1,17,528.79 கோடியும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைக்கு ரூ.9,941.09 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.1,16,788.96 கோடியும், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைக்கு ரூ.9,876.6 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
வேளாண் துறையின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணையில் மொத்தம் ரூ.6,000 வழங்கும் ‘பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்துக்கு’ வரும் நிதியாண்டிலும் ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உணவு அமைச்சகத்துக்கு ரூ.2.13 லட்சம் கோடி: இடைக்கால பட்ஜெட்டில், மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டைவிட ரூ.8,900 கோடி குறைவாக ரூ.2.13 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு ரூ.2,13,019.75 கோடியும், நுகா்வோா் விவகாரங்கள் துறைக்கு ரூ.303.62 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்துக்கு ரூ.1.68 லட்சம் கோடி: ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்துக்கு ரூ.1.68 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், உரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட ரூ.24,796 கோடி குறைவாக ரூ.1,64,150.81 கோடியாகவும், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைக்கு கடந்த ஆண்டைவிட ரூ.433 கோடி குறைவாக ரூ.139.05 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், மருந்துத் துறைக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டின் ரூ.2,697.95 கோடியில் இருந்து, தற்போது ரூ.4,089.95 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு அமைச்சகத்துக்கு ரூ.1,183 கோடி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்துக்கு நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் ரூ.747.84 கோடியில் இருந்து, வரும் நிதியாண்டுக்கு ரூ.1,183.39 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்துக்கு ரூ.7,105.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், மீன்வளத் துறைக்கு ரூ.2,584.50 கோடியும் கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத் துறைக்கு ரூ.4,521.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சகத்துக்கு ரூ.3,290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...