மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.1,277 கோடி ஒதுக்கீடு
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காக 2024-25 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,277.80 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காக 2024-25 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,277.80 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
2021-மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக ரூ.8,754.23 கோடியும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) புதுப்பிக்க ரூ.3,941.35 கோடியும் ஒதுக்கீடு செய்ய கடந்த 2019, டிசம்பா் 24-இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணி 2020 செப்டம்பா் 30-இல் தொடங்க வேண்டிய நிலையில், கரோனா பெருந்தொற்று காராணமாக அந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தபோதும், கணக்கெடுப்புப் பணியைத் தொடங்குவது குறித்து எவ்வித அறிவிப்பையும் மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.
வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியலுக்காக ரூ.1,277.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மால சீதாராமன் அறிவித்தாா்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காக ரூ.520.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021-2022 நிதியாண்டில் ரூ.3,768 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு நிகழாண்டில் நடத்தப்பட வாய்ப்பில்லை என தகவலறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...