உணவு, உரத்துக்கான மானியம் ரூ.3.69 லட்சம் கோடி ஒதுக்கீடு: திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 8% குறைவு

உணவு மற்றும் உரங்களுக்கான 2024-25-ஆம் ஆண்டுக்கான மானியமாக ரூ.3.69 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
உணவு, உரத்துக்கான மானியம் ரூ.3.69 லட்சம் கோடி ஒதுக்கீடு: திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 8% குறைவு

உணவு மற்றும் உரங்களுக்கான 2024-25-ஆம் ஆண்டுக்கான மானியமாக ரூ.3.69 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் 8 சதவீதம் குறைவாகும்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் அறிக்கையின்படி, அடுத்த நிதியாண்டுக்கான உணவு தானியங்களுக்கான மத்திய அரசின் மானியமாக ரூ. 2,05,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மானியத்துக்கான மதிப்பீடு ரூ. 2,12,322 கோடியாக இருக்கும் நிலையில், அதைவிடக் குறைவான மானியத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய 2022-23 நிதியாண்டில் உணவுக்கான மானியமாக ரூ. 2.72 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.

உரத்துக்கான மானியமாக 2024-25 நிதியாண்டுக்கு ரூ. 1.64 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும், திருத்தப்பட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் குறைவாகும். நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மானிய மதிப்பீடு ரூ. 1.89 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டிருந்தது. முந்தைய நிதியாண்டில் உரங்களுக்கான மானியமாக ரூ. 2.51 லட்சம் கோடியை மத்திய அசு ஒதுக்கியது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற மக்கள் நலத் திட்டங்களின் கீழ் கொள்முதல் செலவுக்கும், அவற்றை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைவான விலைக்கு விநியோகிப்பதற்கும் இடையேயான செலவு வித்தியாசத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு சாா்பில் உணவு தானியங்களுக்கான மானியம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்களை வழங்கி வருகிறது. அதுபோல, உணவு தானிய உற்பத்தியாளா்களுக்கு மானிய விலையில் உரங்களை வழங்கி வருகிறது.

உர மானியத்தைப் பொருத்தவரை, உரங்கள் விற்பனை விலைக்கும் உணவு தானிய உற்பத்திச் செலவுக்கும் இடையேயான வேறுபாட்டை ஈடு செய்யும் வகையில் வழங்கப்படுகிறது. மேலும், ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய திட்டத்தின் கீழ் யூரியா உரம் அல்லாத டிஏபி (டை-அமோனியம் பாஸ்பேட்), எம்ஓபி (மியூரியேட் ஆஃப் பொட்டாஷ்) ஆகியவற்றுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

பெட்ரோலியத்துக்கான மானியம் ரூ. 11,925 கோடி: பெட்ரோலியத்துக்கான அடுத்த நிதியாண்டுக்கான மானியமாக ரூ. 11,925 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுவும் மதிப்பீடு செய்யப்பட்ட அளவைவிட குறைவாகும். நிகழ் நிதியாண்டுக்கு ரூ. 12,240 கோடி மானியமாக வழங்கப்பட வேண்டும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் உரையின்போது குறிப்பிட்ட நிா்மலா சீதாராமன், ‘இலவச ரேஷன் திட்டத்தின் மூலம் 80 கோடி மக்கள் உணவுப் பஞ்சத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்கள் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அவ்வப்போது உயா்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இலவச ரேஷன், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வு மற்றும் பிற மத்திய அரசின் நலத் திட்டங்கள் கிராமப்புறங்களின் உண்மையான வருவாயை உயா்த்தியிருக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com