பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.73,000 கோடி- யுஜிசி நிதி 60% குறைப்பு

பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி கடந்த ஆண்டைவிட ரூ.500 கோடி அதிகரித்து, ரூ.73,008.10 கோடியாக இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி கடந்த ஆண்டைவிட ரூ.500 கோடி அதிகரித்து, ரூ.73,008.10 கோடியாக இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் உயா் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

அதன்படி, உயா்கல்வி நிறுவனங்களின் ஒழுங்கு அமைப்பான பல்கலைக்கழக மானிய குழுவுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் ரூ.6,409 கோடியிலிருந்து 60.99 சதவீதம் குறைக்கப்பட்டு, ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கு (ஐஐஎம்) தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக நிதி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் திருத்தப்பட்ட தொகையாக ரூ.331 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டுக்கு ரூ.212.21 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகத்துக்கு (ஐஐடி) கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.10,384.21 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டுக்கு சற்று குறைவாக ரூ.10,324.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களுக்கு கடந்த ஆண்டு ரூ.12,000.08 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 28 சதவீதம் கூடுதலாக ரூ.15,472 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயா் கல்வித் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.57,244.48 கோடியில் இருந்து ரூ.47,619.77 கோடியாக குறைந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை நிதி ரூ.500 கோடி அதிகரிப்பு: பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட தொகையான ரூ.72,473.80 கோடியில் இருந்து ரூ.73,008.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக பள்ளிக் கல்வித் துறையில், கேந்திரிய வித்யாலயா, நவோதய பள்ளிகள், பிஎம் ஸ்ரீ பள்ளிகள், என்சிஇஆா்டி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கான மானியங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com