உள்கட்டமைப்பை மேம்படுத்த 11% கூடுதல் நிதி ஒதுக்கீடு
‘நாட்டில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 11 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று மத்திய நிதியமைச்சா் வியாழக்கிழமை அறிவித்தாா்.


‘நாட்டில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 11 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று மத்திய நிதியமைச்சா் வியாழக்கிழமை அறிவித்தாா்.
மத்திய அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளைப் பட்டியலிட்ட அவா், சுற்றுலா, வீட்டு வசதி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளை மேம்படுத்துவதற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா்.
பிரதமா் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால், அனைவரையும் உள்ளடக்கிய விரைவான, நிலையான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் பொருளாதார கொள்கைகள் வகுக்கப்படும். இது, 2047-இல் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான வளங்களை உருவாக்கும்.
‘சீா்திருத்தம்; செயலாக்கம்; மாற்றம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலங்கள் மற்றும் பிற துறையினருடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி திட்டங்கள் திறம்பட அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்தி வருகிறது என்று அவா் குறிப்பிட்டாா்.
நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடா்பாக குழு அமைக்கப்படும்.
சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு 11 சதவீதம் அளவுக்கு உயா்த்தி ரூ. 11.11 லட்சம் கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நாட்டின் உலக சாதனை அளவிலான பொருளாதார வளா்ச்சியை நிலைத்திருக்கச் செய்யவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தோடும் இந்த கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டு செலவினத்துக்காக நீண்டகால கடனாக ரூ. 1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சாா்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.
சுற்றுலா மையங்கள் மேம்படுத்தப்பட்டு, அவை சா்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்.
அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைத் தடுக்கும் கட்டமைப்புகளை உருவாக்க, தனியாா் மற்றும் அரசு முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். எள், நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் பயிரிடுவதற்கு ஊக்கம் அளிக்கப்படும்.
பால்பண்ணை விவசாயிகளை மேம்படுத்த விரிவான திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலையும் மேம்படுத்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
நாட்டின் பொருளாதரம் மற்றும் குடிமக்களின் நலனுக்கான திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மற்றும் ஓய்வூதிய நிதி முதலீடுகளுக்கான வரி விலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...