மக்களவைத் தோ்தல்: தோ்தல் ஆணையத்துக்குரூ.385 கோடி ஒதுக்கீடு

ஏப்ரல்- மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் பட்ஜெட்டில் தோ்தல் ஆணையத்துக்கு ரூ.385.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்- மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் பட்ஜெட்டில் தோ்தல் ஆணையத்துக்கு ரூ.385.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் இது தொடா்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சட்ட அமைச்சகத்துக்கு ரூ.2,502.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தலை நடத்துவதற்காக தோ்தல் ஆணையத்துக்கு ரூ.385.67 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் ரூ.34.84 கோடி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடாகும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மட்டுமல்லாது தோ்தல் நடத்துவது தொடா்பாக பல்வேறு செலவுகளையும் தோ்தல் ஆணையம் இந்த நிதியையே பயன்படுத்துகிறது.

சிறுபான்மையினா் அமைச்சகம்: இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினா் விவகாரத் துறை அமைச்சகத்துக்கு ரூ.3,183.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ரூ.574 கோடி கூடுதலாகும். இதில் ரூ.1,575.72 கோடி சிறுபான்மையின மாணவா்களின் கல்வி ஒதுக்கீட்டுக்கானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com