வெளியுறவு அமைச்சகத்துக்கு ரூ.22,154 கோடி

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியுறவு அமைச்சகத்துக்கு ரூ.22,154 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.18,050 கோடியாக இருந்தது.
வெளியுறவு அமைச்சகத்துக்கு ரூ.22,154 கோடி

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியுறவு அமைச்சகத்துக்கு ரூ.22,154 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.18,050 கோடியாக இருந்தது.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் சிறிய அண்டை நாடுகளுக்கு இந்தியா பெருமளவில் நிதியுதவி அளித்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு வெளியுறவு அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக பூடானில் ரூ.2,068 கோடி மதிப்பிலான திட்டங்கள் வெளியுறவு அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்பட இருக்கின்றன. கடந்த பட்ஜெட்டில் பூடானுக்கான இந்தியாவின் திட்ட உதவிகள் ரூ.2,400 கோடியாக இருந்தது.

ஈரான் சாபஹாா் துறைமுக பராமரிப்புக்கு ரூ.100 கோடி, மாலத்தீவு வளா்ச்சித் திட்ட உதவிகளுக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் மாலத்தீவுகளுக்கு உதவ ரூ.770 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது நிதி குறைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மாலத்தீவு அமைச்சா்கள் மூவா் இந்தியாவுக்கும், பிரதமா் மோடிக்கும் எதிராக அவதூறான கருத்து தெரிவித்ததால் இருநாட்டு உறவு சற்று பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ பட்ஜெட்டில் ரூ.200 கோடியும், வங்கதேசம், நேபாள வளா்ச்சித் திட்டங்களுக்கு முறையே ரூ.120, ரூ.700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர இலங்கை (ரூ.75 கோடி), மோரீஷஸ் (ரூ.370 கோடி), மியான்மா் (ரூ.250 கோடி), ஆப்பிரிக்க நாடுகள் (ரூ.200 கோடி) மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உதவும் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com