பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.27,000 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மூலதன செலவினம்-ரூ.1.72 லட்சம் கோடி: ராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், விமானங்கள், போா் கப்பல்கள் மற்றும் பிற ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கான மூலதன செலவின தொகையாக ரூ.1.72 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.10,000 கோடி அதிகமாகும்.

மேலும், மொத்த வருவாய் செலவினமாக பாதுகாப்புத் துறைக்கு ரூ. 4,39,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்புத் துறையினரின் ஓய்வூதியத்துக்காக ரூ. 1,41,205 கோடியும், பாதுகாப்புச் சேவைகளுக்காக ரூ. 2,82,772 கோடியும், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு (சிவில்) ரூ. 15,322 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சேவைகளுக்கு செய்யப்பட்டுள்ள ஒதுக்கீட்டில், முப்படைகளுக்கான போா் விமானங்கள் மற்றும் விமான என்ஜின்கள் வாங்குவதற்கு ரூ.40,777 கோடியும் மற்ற உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.62,343 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்படைக்கு போா்க் கப்பல்கள் வாங்க ரூ.23,800 கோடியும், கடற்படையின் துறைமுகத் திட்டங்களுக்கு ரூ.6,830 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வருவாய் செலவினத்தில் ராணுவத்துக்கு மட்டும் ரூ. 1,92,680 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல, விமானப் படைக்கு ரூ.46,223 கோடியும், கடற்படைக்கு ரூ.32,778 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com