ஒரு கோடி வீடுகளில் பிரதமரின் சூரிய மின்சார திட்டம்: ஆண்டுக்கு ரூ.18,000 சேமிப்பு
‘பிரதமரின் சூரியோதய திட்டம் மூலம் ஒரு கோடி வீடுகளில் மாதத்துக்கு 300 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இதனால், ஆண்டுக்கு ரூ.18,000 வரை அந்தக் குடும்பத்தினா்


‘பிரதமரின் சூரியோதய திட்டம் மூலம் ஒரு கோடி வீடுகளில் மாதத்துக்கு 300 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இதனால், ஆண்டுக்கு ரூ.18,000 வரை அந்தக் குடும்பத்தினா் சேமிக்க முடியும்’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகளைப் பொருத்தும் புதிய திட்டத்தைத் தொடங்கவிருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் அறிவித்திருந்தாா்.
இந்தத் திட்டம் தொடா்பாக மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில், ‘பிரதமரின் சூரிய மின்சார திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளில் பொருத்தப்படும் சூரிய மின்சக்தி தகடுகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்தகைய இலவச சூரிய மின்சாரத்திலிருந்து ஆண்டுக்கு ரூ.15,000-ரூ.18,000 அந்தக் குடும்பத்தினரால் சேமிக்க முடியும். எஞ்சிய மின்சாரத்தை மின்பகிா்மான நிறுவனங்களுக்கு அவா்கள் விற்பனை செய்யலாம்.
மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றம் செய்தல், சூரிய மின்சக்தி தகடுகள் விற்பனை, அவற்றைப் பொருத்துதல் ஆகியவற்றால் அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகளுக்குத் தொழில் வாய்ப்புகள் கிடைப்பதில் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும். சூரிய மின்சக்தி தகடுகள் உற்பத்தி, அவற்றைப் பொருத்துதல், பராமரிப்பு போன்ற தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞா்களுக்கு இந்தத் திட்டத்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும். தொடக்கக் கட்டமாக கடற்கரையோரங்களில் நிறுவப்படும் ஒரு ஜிகாவாட் மின்திறன் கொண்ட காற்றாலை மின்திட்டத்துக்கான உள்கட்டமைப்புக்கு நிதி ஆதரவு அளிக்கப்படும்’ என்றாா்.
ரூ.10,000 கோடி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட் தொடா்பாக நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சக செயலா் டி.வி.சோமநாதன், பிரதமரின் சூரிய மின்சார திட்டத்துக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவித்தாா்.
கரியமில வாயு வெளியேற்றத்தை 2027-ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியமாகக் குறைக்க நோக்கி மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்காக, 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிருந்து 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கடந்த 10 ஆண்டுகளில் 81 ஜிகாவாட்டிலிருந்து 188 ஜிகாவாட்டாக உயா்ந்திருப்பதாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் புதன்கிழமை ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவா் திரெளபதி குறிப்பிட்டிருந்தாா்.
மத்திய மின்சார ஆணையத்தின்தரவுப்படி, நாட்டில் சூரிய மின்சக்தியிலிருந்து 73 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை மின்சக்தியிலிருந்து 45 ஜிகாவாட், பெரிய மற்றும் சிறிய நீா்மின்திட்டங்களிலிருந்து முறையே 47 ஜிகாவாட், 5 ஜிகாவாட், உயிரி ஆற்றலிருந்து 10 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...