

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளுக்கு, இன்றைய வர்த்தகத்தில் 2 சதவிகிதம் உயர்ந்து அதன் சந்தை மதிப்பானது ரூ.41,860.54 கோடியாக அதிகரித்துள்ளது.
நாட்டின் மதிப்புமிக்க நிறுவனத்தின் பங்கு இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 2.18 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,914.75 ஆக முடிவடைந்தது.
இன்றைய வர்த்தக நேரத்தில், இந்த நிறுவனத்தின் பங்குகள் 3.40 சதவிகிதம் உயர்ந்து அதன் உச்சமான ரூ.2,949.90 எட்டியது.
தேசிய பங்குச் சந்தையில் இது 2 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,913 ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.41,860.54 கோடி அதிகரித்து ரூ.19,72,028.45 கோடியாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.20 லட்சம் கோடியை எட்டும் தூரத்தில் வந்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
வர்த்தக அளவு அடிப்படையில் நிறுவனத்தின் 6.54 லட்சம் பங்குகள் மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையில் 98.26 லட்சம் பங்குகள் வர்த்தகமாயின.
இந்த ஆண்டில் இதுவரை, இந்த பங்கு 12.76 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.