புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பயி சோரன் வெற்றி!

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி  பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2024, 8:51 am

DIN

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையில் இன்று (பிப். 5) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

பேரவையில் சம்பயி சோரன் தலைமையிலான அரசுக்கு 47 வாக்குகள் ஆதரவாகவும், 29 வாக்குகள் எதிராகவும் பதிவாகின. 

சட்டப்பேரவையில் உறுப்பினரளின் பெரும்பான்மை பெற்றதால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் புதிதாக முதல்வராக பதவியேற்றுள்ள சம்பயி சோரன் தலைமையிலான அரசு ஆட்சி உறுதியாகியுள்ளது.

நில மோசடியுடன் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவரான சம்பயி சோரன், மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

ஜாா்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். மாநில சட்டப்பேரவையில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க இன்று ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பயி சோரன் தலைமையிலான ஆட்சிக்கு 47 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். 29 பேர் எதிராக வாக்களித்தனர். இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.