தேர்தல் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம்: தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரப் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம்ட கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம்: தேர்தல் ஆணையம்


புது தில்லி: தேர்தல் பிரசாரப் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம்ட கேட்டுக்கொண்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், போஸ்டர் ஒட்டுதல் போன்ற எந்த விதத்திலும், தேர்தல் பிரசாரங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியிருக்கிறது.

அதேவேளையில், கட்சியோ அல்லது வேட்பாளரோ, தேர்தல் பிரசாரத்தில் எந்த வகையிலாவது குழந்தைகளை ஈடுபடுத்தினால், அதனை ஒருபோதும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என யாரும், தேர்தல் பிரசாரத்தின் போது குழந்தைகளை கையில் வைத்திருப்பது, தங்களது வாகனத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பேரணி செல்வது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் பிசாரக் கூட்டங்களின்போது கவிதை சொல்வது, பாடல்கள் பாடுவது, பேச்சு, அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னங்களைக் காட்சிப்படுத்துதல் உட்பட எந்த வகையிலும் அரசியல் பிரசாரப் பணியில் குழந்தைகளைப் பயன்படுத்துவதற்கு இந்தத் தடை விதிக்கப்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com