ஜாா்க்கண்ட் பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் அழைத்து வந்தனர்.
நில மோசடியுடன் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, தனது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்த நிலையில், ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவரான சம்பயி, மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, 47 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரை!
இதையடுத்து, ஜாா்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். மாநில சட்டப்பேரவையில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து, ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஹேமந்த் சோரனை சட்டப்பேரவைக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈழத்தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்யுங்கள்... உருக்கமான பதிவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

தேமுதிகவிற்கு எம்பி சீட் மறுக்கப்பட்டதா? EPS விளக்கம் | ADMK | DMDK

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! | EPS | ADMK | NDA

கேரள தேர்தல்: பாஜக - எல்டிஎஃப் இடையே ரகசிய ஒப்பந்தம்! பிரியங்கா காந்தி தாக்கு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

