உங்களுக்கு எதிர்க்கட்சி வரிசைதான் இனி எப்போதுமே! பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரை

தேர்தலில் போட்டியிடும் சக்தியை எதிர்க்கட்சிகள் இழந்துவிட்டதாகவும், வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிர்த்துள்ளார். 
உங்களுக்கு எதிர்க்கட்சி வரிசைதான் இனி எப்போதுமே! பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரை

தேர்தலில் போட்டியிடும் சக்தியை எதிர்க்கட்சிகள் இழந்துவிட்டதாகவும், இனி வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர் எனக் கூறியும் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துகின்றன. 

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நீண்ட நாள்களாகவே எதிர்க்கட்சி வரிசையிலேயே உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான்  இருப்பார்கள். ஓர் எதிர்க்கட்சியாகவும் நாட்டு மக்களை அவர்கள் (காங்கிரஸ்) திருப்திப்படுத்தவில்லை.

நாட்டிற்கு ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சி அவசியம் என்று எப்போதுமே நான் சொல்வதுண்டு. பலருக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியே இல்லை. சில தொகுதிகளில் பல அதிரடி மாற்றங்களை எதிர்க்கட்சி செய்தது. இந்த முறையும் போட்டியிடும் தொகுதிகள் மாறலாம். மக்களவைக்கு வருவதற்கு பதிலாக பலர் மாநிலங்களவைக்கு செல்லவே விரும்புகின்றனர்.   

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் நாட்டிற்கே பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. 

10 ஆண்டுகள் ஆட்சியில், வலுவான பொருளாதாரம் உருவாகியுள்ளது. எங்களின் மூன்றாவது ஆட்சியில் விரைவில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். வந்தே பாரத், புதிய நாடாளுமன்றம், சுயசார்பு உற்பத்தி (மேக் இன் இந்தியா) உள்ளிட்டவை எங்கள் அரசின் சாதனைகள். 

ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெல்லும்

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி வெல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டு வெற்றி பெறும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 

ஏழைகளுக்கு தேவையான வாய்ப்புகள், தொழிலுக்கான வழிவகையை செய்துகொடுத்தாலே நாட்டில் ஏழ்மை ஒழிந்துவிடும். 

பாஜக மீண்டும் ஆட்சியமைத்து 1000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

கூட்டணிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை

காங்கிரஸ் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகவும், கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை எனவும் நரேந்திர மோடி  விமர்சித்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம்; ஒரே குடும்பம் ஆட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல். ஒருசிலரின் முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது காங்கிரஸ். ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி கூட்டணியில் ஒருவர்மீது  மற்றொருவருக்கே நம்பிக்கையில்லை. கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் தலைமையின் மீது நம்பிக்கையில்லை.

பாஜக ஆட்சியில் சாலையோர நடைபாதை வியாபாரிகள் வங்கிக்கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.  10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 

ஏழைகளுக்கு தேவையான வாய்ப்புகள், தொழிலுக்கான வழிவகையை செய்துகொடுத்தாலே நாட்டில் ஏழ்மை ஒழிந்துவிடும். நாட்டின் எல்லைப்பகுதி வரை அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com