டிஜிட்டல் இந்தியாவுக்கு அடித்தளமிட்டது காங்கிரஸ்: மல்லிகார்ஜுன கார்கே

ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி எண்ணற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
மல்லிகார்ஜுன கார்கே  (கோப்புப் படம்)
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப் படம்)

ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி எண்ணற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

பொய் பரப்புவதில் பிரதமர் மோடி வல்லவர் என்றும், அனைத்துப் புள்ளி விவரங்களையும் மறைத்து பொய்களைப் பரப்புவதாகவும் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பகிர்ந்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையேயான இடைவெளி மூன்று மடங்காகியுள்ளது வருத்தமளிக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2.2 சதவிகிதமாக இருந்தது. ஆனால் மோடி ஆட்சியில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகளில் சராசரி ஜிடிபி வளர்ச்சி 8.13 சதவிகிதம். பாஜக ஆட்சியில் 5.6 சதவிகிதம் மட்டுமே உள்ளது ஏன்?

டிஜிட்டல் இந்தியாவுக்கு அடித்தளமிட்டது காங்கிரஸ் கட்சி. ஆதார், வங்கிக் கணக்குகளுக்கான பணிகளைத் தொடங்கியது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். 

பிரதமர் மோடி அனைத்து புள்ளி விவரங்களையும் மறைத்து பொய்களைப் பரப்பி வருகிறது. இரு அவைகளிலும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல், காங்கிரஸ் கட்சியை வசைபாடுவதிலேயே குறியாக இருக்கிறார் என விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com