22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் தாயுடன் இணைந்தார்.. ஆனால்?

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் மீண்டும் தாயுடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துளள்து.
ஆண் பிள்ளைகள்
ஆண் பிள்ளைகள்


உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் மீண்டும் தாயுடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துளள்து.

காணாமல் போன போது 11 வயதாக இருந்த மகன், தற்போது ஒரு துறவியாக, தனது சொந்த ஊருக்கு வந்து தாயை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. துறவியாக மாறிய மகன், கையில் வாத்தியக் கருவியை வைத்துக்கொண்டு மிக அழகாக இறைப்பாடல்களைப் பாடுகிறார்.

இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், ரிதிபால் சிங்கின் 11 வயது மகன் பிங்கு, 2002ஆம் ஆண்டு தில்லியில் வசித்து வந்த போது தந்தை திட்டியதால் வீட்டைவிட்டு வெளியேறினார்.  தொடர்ந்து பல ஆண்டுகளாக பிங்குவை பெற்றோர் தேடி வந்தனர். இப்படியே 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது பெற்றோரை தேடி சொந்த ஊருக்கு வந்த பிங்குவை பெற்றோரும், ஊர்க்காரர்களும் எளிதாக அடையாளம் கண்டுகொண்டனர்.

தாய், தந்தையைப் பார்த்து விட்டுக் கிளம்பிய பிங்குவை தங்களுடன் இருக்கும்படி பெற்றோர் வற்புறுத்தியும், துறவியான தான், குடும்பத்துடன் இணைய வரவில்லை என்றும், துறவியின் ஒரு கடமையாக குடும்பத்தினரின் ஆசியைப் பெற வேண்டியே வந்ததாகவும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com