அகர்தலா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சிலர் கலவரத்தை உண்டாக்க முயற்சிப்பதாக அந்த மாநில முதல்வர் மானிக் சாஹா தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் முதன்மை எதிர்க்கட்சியான திப்ரா மோதாவின் மாணவ அணி, கால வரையற்ற சாலை மற்றும் ரயில் பாதை முற்றுகைக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் 24 சதவிகித மக்கள் பயன்படுத்தும் கோக்போரோக் மொழி உள்ளது. இந்த பழங்குடி மொழிக்கு பிரத்யேக லிபி கிடையாது.
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த ரோமன் முறையை மாற்றி பெங்காலி லிபியில் பொதுத் தேர்வுகளை எழுத வேண்டும் என திரிபுரா மாநில பள்ளி கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. மாநில பள்ளிக் கல்வித்துறை இரு மொழிகளிலும் எழுதலாம் என அறிவித்தது.
இந்த நிலையில் மார்ச் 1 பொதுத் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சியின் மாணவ அமைப்பு போராட்டம் ஜன.12-ல் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி
இது குறித்து திரிபுரா முதல்வர், “சட்டம் மற்றும் ஒழுங்கு குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேறி மாநிலத்தின் வளர்ச்சி பாதைக்கு வழிவகுக்கும்போது சிலர் அதற்கு ஊறு விளைவிக்க நினைக்கின்றனர். குளத்தைக் கலக்கி மீன் பிடிக்க முயற்சிக்கும் செயல் இது” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மத்திய-மாநில உறவுகள் குறித்த அறிக்கைக்கு கா்நாடகம் ஆதரவு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

பிளஸ் 1 அரியா் தோ்வு: 3,576 போ் பங்கேற்கவில்லை

சவூதியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

மேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

