
கொல்கத்தா: பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நெஞ்சுவலி வலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
73 வயதான நடிகருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் பிற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த விவரங்களை பிறகு வழங்க முடியும் என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகராக இருந்து பாஜக தலைவராக மாறிய மிதுன் இன்று காலை 10.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நரம்பியல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் ஐ.டி.யுவில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருதை பெற்றுள்ளார். தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஒடியா மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் சுமார் 350 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.