புது தில்லி : எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, தில்லியில் போட்டியிடும் மக்களவைத் தொகுதிகள் குறித்து காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு (பிஏசி) கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான கட்சி வேட்பாளா்கள் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணிக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சந்தீப் பதக் கூறியதாவது, “குஜராத்தில் இந்தியா கூட்டணி சார்பில் 8 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட கோரிக்கை வைத்துள்ளோம்.
தில்லியில் மொத்தம் 6 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட விருப்பப்படுகிறது. காங்கிரஸுக்கு ஒரு தொகுதி வழங்க முடிவு செய்துள்ளோம்.காங்கிரஸ் கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்கவில்லையெனில், தில்லியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிராக் தில்லியில் 43 பசுக்களை மீட்ட தன்னாா்வலா்களை கௌரவித்த ஆம் ஆத்மி தலைவா் சௌரவ் பரத்வாஜ்
தெற்கு தில்லியில் சட்டவிரோத பால் பண்ணைகள் நடத்தப்படுவதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

திமுக கூட்டணி! கை கொடுக்குமா, காலை வாருமா காங்கிரஸ்?
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

