குடுவை வெடிகுண்டுகள்
குடுவை வெடிகுண்டுகள்IANS

குடுவை வெடிகுண்டுகளுடன் பிடிபட்ட நபர்!

உத்தர பிரதேசத்தில் நான்கு வெடிகுண்டுகளுடன் பிடிபட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 4 குடுவை வெடிகுண்டுகள் வைத்திருந்த ஒருவரை சிறப்பு படை (எஸ்டிஎஃப்) அதிகாரிகள் கைது செய்தனர்.

ஜாவேத் என்பவரிடமிருந்து நான்கு குடுவை வெடிகுண்டுகள், குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கச் செய்யும் கருவிகளுடன் கைப்பற்றப்பட்டன. அவற்றை அதிகாரிகள் செயலழிக்க செய்தனர்.

2013-ல் நடந்த முசாபர் நகர் கலவரத்தில் இவருக்குப் பங்கிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர், நான்கு குண்டுகளையும் இன்னொரு நபரிடம் கொடுக்க வந்ததாகவும் அதற்கு முன்பணமாக ரு.10 ஆயிரம் பெற்றதாகவும் தெரிவித்தார். அவரது பெயர் இம்ரானா என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மீதத் தொகையான ரூ.40 ஆயிரம், குண்டுகளை ஒப்படைக்கும்போது இம்ரானா தருவதாக பேசியிருந்ததாகவும் அதிகாரிகளிடம் ஜாவேத் தெரிவித்தார்.

இந்த குண்டுகள் எங்கு பயன்படுத்தவிருந்தன என்பது குறித்து தனக்கு தெரியாது என ஜாவேத் தெரிவித்தார்.

இம்ரானாவைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

X
Dinamani
www.dinamani.com