செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ரூ.100 கோதுமை திருட்டு: 45 ஆண்டுகளுக்குப் பிறகு ம.பி.யைச் சேர்ந்த நபர் கைது

மத்தியப் பிரதேசத்தில் ரூ.100 மதிப்பிலான கோதுமையைத் திருடியதற்காகத் தப்பி ஓடிய நபர், 45 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 9:06 am IST

மத்தியப் பிரதேசத்தில் ரூ.100 மதிப்பிலான கோதுமையைத் திருடியதற்காகத் தப்பி ஓடிய நபர், 45 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேச மாநிலம், பல்காட் கிராமத்தைச் சேர்ந்த சலீம் தனக்கு 20 வயது இருந்தபோது 1980 ஆம் ஆண்டு அவரும் மேலும் ஆறு பேரும் பலசமுந்த்-காகட் பகுதியில் உள்ள வயல்களில் இருந்து கோதுமையைத் திருடியுள்ளனர். அந்தத் திருட்டின் மதிப்பு 100 ரூபாய் என்று அதிகாரி கூறினார்.

அந்த நேரத்தில் ஒரு குவிண்டால் நல்ல தரமான கோதுமையின் விலை 115 ரூபாய் அல்லது கிலோ ஒன்றுக்கு 1.15 ரூபாய் ஆக இருந்தது. திருட்டுக்குப் பிறகு சலீம், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பிறகு தார் மாவட்டத்தில் உள்ள பாக் நகரில் தனது மகனுடன் மளிகைக் கடை நடத்தி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்ததுடன், சலீமுக்கு எதிராக வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வேறொரு குற்றவாளியைத் தேடும் போது, சைபர் பிரிவு உதவியுடன் பாக் நகரில் உள்ள அவரது மளிகைக் கடையில் சலீம் கண்டுபிடிக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் கோதுமை திருட்டு வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு மறக்கப்பட்டிருக்கும் என்றும், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தான் பாதுகாப்பாக இருப்பேன் என்றும் தான் நம்பியதாக சலீம் போலீஸாரிடம் கூறியுள்ளார். முஜாஹித்தின் மகனான சலீம், பிறகு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

Summary

According to a senior police officer in Khargone district, Sheikh was 20 years old when he committed the theft in the Balasamud Kakad village in 1980.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.