திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அஸ்வின் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்: பிரதமர் மோடி

அஸ்வினின் அசத்தல் சாதனைக்கு பிரதமர் வாழ்த்து!

News image
ஒடிசாவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
Updated On :16 பிப்ரவரி 2024, 3:46 pm

DIN

500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பிரதமரின் வாழ்த்துச்செய்தியில், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி, மாபெரும் சாதனை படைத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரின் பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை, விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாகும். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் எடுத்தார். அவர் தனது 98வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். அதேசமயம் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் ஆவார்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே முதல் இடத்தில் உள்ளார். முன்னதாக அஸ்வினை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்திய நிலையில் தற்போது பிரதமர் மோடியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.