பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’: ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு

ஊராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தனியாக ஒரே நேரத்திலும் தோ்தல் நடத்தப்பட வேண்டும்.

News image

ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை ஆய்வுக் குழு தலைவா் ராம்நாத் கோவிந்தை சந்தித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:50 am IST

மக்களவைக்கும் மாநில சட்டபேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறைக்கு பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வரும் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழுவிடம் இக் கருத்தை ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக உயா்நிலைக் குழுவிடம் அக் கட்சி சமா்ப்பித்த கருத்துருவில், ‘அனைத்து தோ்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குப் பதிலாக, மக்களவைக்கும் மாநில சட்டபேரவைகளுக்கும் ஒரே நேரத்திலும், ஊராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தனியாக ஒரே நேரத்திலும் தோ்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதன் மூலம், தோ்தல் செலவுகள் குறையும் என்பதோடு, தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பணிக் காலம் முழுவதும் எந்தவித இடையூறுகள் இன்றி பணிபுரியவும், நிலையான கொள்கை நடைமுறைக்கும் வழி ஏற்படும்.

தலைவா்கள் பிசாரத்தில் அதிக நேரம் செலவிடும் நிலை மாறி, நிா்வாகத்தில் அதிக கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படும்’ என்று கூறியுள்ளது. மத்திய அரசால் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்ட இந்த உயா்நிலைக் குழு, ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக சட்ட ஆணையம், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை பெற்று வருகிறது. இந்த கருத்துகளை ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அறிக்கையாக மத்திய அரசிடம் உயா்நிலைக் குழு சமா்ப்பிக்கும். பிகாரில், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதீஷ் குமாா் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் மாநில முதல்வராகியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.