நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி: ராகுல்

இந்தியா அன்பின் நாடு, வெறுப்பின் நாடு அல்ல. மக்களிடையே நடைபெறும் மோதலால் நாடு பலவீனமாகிவிடும் என்றார் ராகுல்.
நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி: ராகுல்
-

நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் இரண்டாவது நாளாக வாராணசியில் இந்தியா ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் ஜீப்பில் சன்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

 வாராணசியில் ராகுல்
வாராணசியில் ராகுல்-

குடாலியா பகுதியைச் சுற்றிப்பார்த்த ராகுல் அங்குள்ள மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியது,

இந்தியா அன்பின் நாடு, வெறுப்பின் நாடு அல்ல. மக்களிடையே நடைபெறும் மோதலால் நாடு பலவீனமாகிவிடும். உண்மையான தேசப்பற்று என்பது நாட்டை ஒன்றிணைப்பதாகும்.

நாட்டில் பணக்கார்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என்று இரண்டு இந்தியா செயல்படுகிறது.

-

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்னைகளை காட்டுவதற்குப் பதில் ஊடகங்கள் பிரதமர் மோடியையும், ஐஸ்வர்யா ராயையும் காண்பித்து வருகின்றது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் மட்டுமே நாட்டில் உள்ள இரண்டு பிரச்னைகள் இவ்வாறு அவர் பேசினார்.

வாராணசியில் நடந்த நடைப்பயணத்தில் அப்னா தளம் (காமராவாடி) தலைவர் பல்லவி படேல் மற்றும் சிரத்துவின் சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) எம்எல்ஏவும் இணைந்தனர்.

-

ரேபரேலியில் நடைபெறும் யாத்திரையில் தானும் கலந்து கொள்வதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த நடைப்பயணமானது உத்தரப் பிரதேசம் வழியாக ராஜஸ்தானுக்குள் நுழைய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com